விக்னேஸ்வரன் தலைமையில் உதயமாகிறது புதிய கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையில் உதயமாகிறது புதிய கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையில் உதயமாகிறது புதிய கூட்டணி

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 2:18 pm

Colombo (News 1st) வட மாகாண முன்னாள் முதலமைச்சர் C.V. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி எனும் புதிய அரசியல் கூட்டணி வடக்கில் இன்று (09) உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.

C.V. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சட்டத்தரணி ஶ்ரீகாந்தாவின் தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்து கொண்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்