முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில்…

முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில்…

முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில்…

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 9:13 am

Colombo (News 1st) பொதுமன்னிப்பு காலத்திற்குள் 10 அதிகாரிகள் உள்ளிட்ட முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத்தை சேர்ந்த 2,974 பேரும் கடற்படையை சேர்ந்த 537 பேரும் விமானப்படையை சேர்ந்த 788 பேரும் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டுள்ளனர்.

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேவையை கைவிட்டுச் சென்ற முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையை கைவிட்டுச் சென்றவர்களுக்கு இந்த மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்