மின்னல் தாக்கியதில் அரியவகை மலைக்குரங்குகள் உயிரிழப்பு ; உகண்டாவில் சம்பவம்

மின்னல் தாக்கியதில் அரியவகை மலைக்குரங்குகள் உயிரிழப்பு ; உகண்டாவில் சம்பவம்

மின்னல் தாக்கியதில் அரியவகை மலைக்குரங்குகள் உயிரிழப்பு ; உகண்டாவில் சம்பவம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Feb, 2020 | 12:10 pm

Colombo (News 1st) உகண்டாவில் மின்னர் தாக்கியதில் 4 அரிய வகை மலைக்குரங்குகள் உயிரிந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவற்றில் குட்டியை சுமந்திருந்த பெண் கொரில்லா உள்ளிட்ட 3 கொரில்லாக்களும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உகண்டா தேசிய பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகம், பிரேத பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

பூங்காவிலிருந்த 17 அரியவகை கொரில்லாக்களில் 4 மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்த நிலையில் ஏனைய 13 கொரில்லாக்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உகண்டா
பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்