சிறுவர் வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் அதிகரிப்பு

சிறுவர் வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் அதிகரிப்பு

சிறுவர் வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 12:22 pm

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்காக, தௌிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதித்த விதானபத்திரன கூறியுள்ளார்.

சிறுவர் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கின்றமை குறித்து மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, சிறுவர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்