ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 8:10 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை (10) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதன் பிரகாரம், புதிய முன்னணியின் பொதுச் செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கட்சி செயற்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறவுள்ளது.

இதனைத் தவிர, கடந்த செயற்குழுக் கூட்டத்தில் உறுப்புரிமைகள் இரத்து செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் மீண்டும் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்த 30ஆம் திகதி இறுதியாக கூடியது.

கடந்த 6ஆம் திகதி குழு கூடவிருந்த போதிலும் பின்னர் கூட்டம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்