MCC இலங்கையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது

MCC உடன்படிக்கை இலங்கையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது: அமெரிக்க பிரதி உதவி இராஜாங்க செயலாளர்

by Staff Writer 08-02-2020 | 7:41 PM
Colombo (News 1st)  MCC உடன்படிக்கை இலங்கையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என தெற்கு, மத்திய ஆசிய விடயங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி உதவி இராஜாங்க செயலாளர் ஜொனதன் ஹெனிக் (Jonathan Henick) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், MCC உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் 480 அமெரிக்க டொலர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பயன்படுவதால் சகல மக்களும் நன்மையடைவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளில் சமாதானம், சௌபாக்கியம், ஸ்திரத்தன்மைக்கு வித்திடும் கடல்சார் நடவடிக்கைகளுக்கான சுதந்திரம், கடல் பாதுகாப்பு, பிரிவினைவாதத்திற்கு வலுசேர்க்கும் விடயங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற இலங்கையும் அமெரிக்காவும் தயாராக இருப்பதாக பிரதி உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.