மூன்று நிறுவனங்களை விசாரிக்க கோப் குழு நடவடிக்க

மூன்று நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்த கோப் குழு நடவடிக்கை

by Staff Writer 08-02-2020 | 4:23 PM
Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்த கோப் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த நிறுவனங்களை அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மற்றும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் வௌிநாடுகளில் வழக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. நேற்று (07) இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

ஏனைய செய்திகள்