பண்டாரவளையில் பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

பண்டாரவளையில் பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

பண்டாரவளையில் பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2020 | 4:03 pm

Colombo (News 1st) பண்டாரவளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட 7 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் முன்னிலையில் மாணவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்தர வகுப்பிலுள்ள மாணவர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று (07) மாலை 7 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்