நிலையான வரிக்கொள்கை, சர்வதேச முதலீடுகளை இலங்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

நிலையான வரிக்கொள்கை, சர்வதேச முதலீடுகளை இலங்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

நிலையான வரிக்கொள்கை, சர்வதேச முதலீடுகளை இலங்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2020 | 8:41 pm

Colombo (News 1st) உயர் மட்டத்திலுள்ள அரச கடன் மற்றும் நாட்டின் செலவீனத்தினை கணிக்கும் பொழுது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நிலையான வரிக்கொள்கை மற்றும் சர்வதேச முதலீடுகளை தக்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) குறிப்பிட்டுள்ளது.

அரச அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் சர்தேச நாணய நிதியத்தின் ஆசிய வலயத்திற்கான பிரதித் தலைவர் மானுவெலா கொரட்டி (Manuela Goretti) வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தினை மீளக் கட்டியெழுப்பி மீண்டும் ஸ்திரமான வளர்ச்சியினை இலங்கை எட்டுவதை காண முடிவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 3.7 வீதமாகவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச பிரிவுகளின் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், வரிச் சலுகைகளை வழங்குதல், அரச செலவீனங்களை குறைத்தல் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துதல் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச
நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்