திகனயில் விபத்தில் இளைஞர்கள் நால்வர் பலி

திகனயில் விபத்தில் இளைஞர்கள் நால்வர் பலி

திகனயில் விபத்தில் இளைஞர்கள் நால்வர் பலி

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2020 | 3:58 pm

Colombo (News 1st) திகன – மெனிக்ஹின்ன வீதியில் மல்பான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கெப் ஒன்று வீதியின் ஓரத்தில் இருந்த காங்ரீட் கற்குவியலில் மோதி பள்ளத்தில் குடைசாய்ந்து இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, கெப் வண்டியின் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

17 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

திருகோணமலை, உகன மற்றும் மஹியங்கனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மெனிகின்ன தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒருவரின் கெப் வாகனமே விபத்திற்குள்ளானதாக கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்