முறிகள் தடயவியல் கணக்காய்வு: கப்ராலின் கருத்திற்கு சுனில் ஹந்துன்னெத்தி பதில்

by Staff Writer 07-02-2020 | 9:45 PM
Colombo (News 1st) முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் தெரிவித்த கருத்திற்கு, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி இன்றைய நியூஸ்லைன் நிகழ்ச்சியில் பதிலளித்தார். தடயவியல் கணக்காய்வின் ஊடாக, ஏதேனும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆய்வு செய்யப்படும். சில தொழில்நுட்ப விடயங்கள் சாதாரண கணக்காய்வின்போது வெளிவராமையால் அது தொடர்பில் விசேட நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தினால் கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்படும். குற்றத்தின்போது விஞ்ஞானபூர்வ சாட்சியங்களைப் பெறுவதற்காக, நிபுணர்கள் மூலமாக தடயவியல் விசாரணை நடத்தப்படுவதுடன், பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கமைய, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசேட நிபுணத்துவமுள்ள நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டு, அவ்வாறான அறிக்கையைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலதிக தகவல்களை காணொளியில் காண்க...