நல்லாட்சி அரசாங்கத்தில் 2.8 பில்லியன் ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு

by Staff Writer 07-02-2020 | 9:15 PM
Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அமைச்சுகளுக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2.8 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வௌியிட்டுள்ள தகவலுக்கு அமைய, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சில வருடங்களுக்குள் பல்வேறு அமைச்சுகளுக்கான வாகனங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு (2017)  2 வாகனங்கள் - 82.51 மில்லியன் ரூபா
  • விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 2 வாகனங்கள் 80.37 மில்லியன் ரூபா
  • விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சு 3 வாகனங்கள் 110.92 மில்லியன் ரூபா
  • நிதி அமைச்சு 1 வாகனம் 33 மில்லியன் ரூபா
  • பாதுகாப்பு அமைச்சு (2016, 2017, 2019) 8 வாகனங்கள் 327.47 மில்லியன் ரூபா
  • தேசிய கொள்கைகள் பொருளாதாரம் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி தொழிற்பயிற்சி இளைஞர் விவகார அமைச்சு (2016) 3 வாகனங்கள் 70.5 மில்லியன் ரூபா
  • தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு 2 வாகனங்கள் 84 மில்லியன் ரூபா
  • நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு (2016) 2 வாகனங்கள் 79 மில்லியன் ரூபா
  • சுகாதார அமைச்சு (2017) 2 வாகனங்கள் 79.38 மில்லியன் ரூபா
  • வௌிவிவகார அமைச்சு (2017) 2 வாகனங்கள் 84.05 மில்லியன் ரூபா
  • பெருந்தெருக்கள், பெட்ரோலிய வளத்துறை அமைச்சு (2016, 2017) 5 வாகனங்கள் 161.52 மில்லியன் ரூபா
  • கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (2017) 4 வாகனங்கள் 162.26 மில்லியன் ரூபா
  • மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு (2016) 1 வாகனம் 32.20 மில்லியன் ரூபா
  • மகளிர் விவகார அமைச்சு (2016) 2 வாகனங்கள் 82.05 மில்லியன் ரூபா
  • காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு (2019) 2 வாகனங்கள் 71.05 மில்லியன் ரூபா
  • ஆரம்ப கைத்தொழில் அமைச்சு 1 வாகனம் 35 மில்லியன் ரூபா
  • கல்வி அமைச்சு (2017) 2 வாகனங்கள் 80.6 மில்லியன் ரூபா
  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சு (2016) 3 வாகனங்கள் 97.08 மில்லியன் ரூபா
  • பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு (2017) 1 வாகனம் 40.41 மில்லியன் ரூபா
  • மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு (2016) 1 வாகனம் 42 மில்லியன் ரூபா
  • கைத்தொழில் அமைச்சு (2016, 2017) 5 வாகனங்கள் 198.34 மில்லியன் ரூபா
  • உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு (2016) 4 வாகனங்கள் 140 மில்லியன் ரூபா
  • தேசிய ஒருமைப்பாடு அமைச்சு (2017) 3 வாகனங்கள் 115.6 மில்லியன் ரூபா
  • அரச தொழில் முயற்சியாண்மை அமைச்சு (2016) 2 வாகனங்கள் 74.7 மில்லியன் ரூபா
  • சுற்றுலாத்துறை அமைச்சு (2016, 2017) 2 வாகனங்கள் 71.16 மில்லியன் ரூபா
  • மகாவலி அபிவிருத்தி அமைச்சு (2016) 1 வாகனம் 42.50 மில்லியன் ரூபா
  • உயர் கல்வி அமைச்சு (2016) 3 வாகனங்கள் 113.38 மில்லியன் ரூபா
  • துறைமுகங்கள் அமைச்சு (2016) 2 வாகனங்கள் 80 மில்லியன் ரூபா
  • விளையாட்டு அமைச்சு (2017) 4 வாகனங்கள் 160.2 மில்லியன் ரூபா
  • சர்வதேச வர்த்தக அமைச்சு (2016) 2 வாகனங்கள் 76.28 மில்லியன் ரூபா
மக்கள் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பது ஏற்புடையதா?