முல்லை ஜேசுதாசன் காலமானார்

முல்லை ஜேசுதாசன் காலமானார்

முல்லை ஜேசுதாசன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2020 | 4:30 pm

Colombo (News 1st) நடிகரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் காலமானார்.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இன்று அதிகாலை அவர் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் முல்லைத்தீவு , மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்து திரைப்படத்துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியுள்ளதுடன், முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று முல்லை யேசுதாசன் நடித்துள்ளார்.

முல்லை ஜேசுதாசன் சுமார் மூன்று தசாப்தங்களாக திரைப்படத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்