கோப் குழு தலைவராக சுனில் ஹந்துன்னெத்தி மீண்டும் நியமனம்

கோப் குழு தலைவராக சுனில் ஹந்துன்னெத்தி மீண்டும் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2020 | 4:09 pm

Colombo (News 1st) கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழு இன்று கூடியபோது அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா அவரின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க அதனை வழிமொழிந்தார்.

இன்று நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்