கொரோனா தொற்று சந்தேகத்தில் 14 பேர் சிகிச்சை

கொரோனா தொற்று சந்தேகத்தில் 14 பேர் சிகிச்சை

by Staff Writer 07-02-2020 | 4:23 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 14 பேர் நாட்டின் பல பகுதிகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களின் குருதி உள்ளிட்ட மாதிரிகள் பகுப்பாய்விற்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் 4 பேரும் கண்டி போதனா வைத்தியசாலையில் 4 பேரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் 3 பேரும் பதுளை பொது வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீன நாட்டு பெண் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.