கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணையுமாறு ஆனந்தசங்கரி அழைப்பு

கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணையுமாறு ஆனந்தசங்கரி அழைப்பு

கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணையுமாறு ஆனந்தசங்கரி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2020 | 7:51 pm

Colombo (News 1st) கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் இணைந்து, விட்ட பணியை தொடருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

சிலரின் தூண்டுதலால் சுயநல நோக்குடன் கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள், தந்தை செல்வா உள்ளிட்ட தலைவர்களின் இலட்சியத்தில் நம்பிக்கை வைத்து கட்சியுடன் மீண்டும் இணையுமாறு அறிக்கை ஒன்றினூடாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுயநலம் கருதாது, பதவிகளுக்கு ஆசைப்படாது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கட்சி உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேற்றுமைகள் இருப்பின் அவற்றை மறந்து, ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்