யாழில் 130 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

யாழில் இரு வேறு பகுதிகளில் இருந்து 130 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

by Staff Writer 06-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 130 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 100 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலால்வரி திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று அதிகாலை சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர். கொழும்பிற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் கேரள கஞ்சா வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 31 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர். கட்டைக்காடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 52 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.