மாத்தளை மற்றும் கட்டுநாயக்கவில் நீர்வெட்டு

மாத்தளை மற்றும் கட்டுநாயக்கவில் நீர்வெட்டு

by Staff Writer 06-02-2020 | 7:00 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க சீதுவ நகரசபைக்குட்பட்ட பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (06) காலை 9 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. களனி ஆற்றின் தெற்குக்கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்டத்திற்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், கட்டுநாயக்க சீதுவ நகரசபைக்குட்பட்ட பகுதி, ஜா எல, ஏக்கல, கந்தான ஆனியாகந்த, பட்டகம, துடெல்ல, நிவந்தம, மா எலிய, கெரவலப்பிட்டிய, மாத்தாகொட, வெலிசர, மாபோல, எல்பிட்டிவல, மஹபாகே மற்றும் திக்ஓவிட்ட ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, மாத்தளையிலுள்ள பல இடங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மாத்தளையிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, மாத்தளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், ஏ-9 வீதியில் மாத்தளையிலிருந்து பில்லிவெல பகுதி வரை, பலாபத்வல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள், ஒய பஹல பிரதேசம், கந்தெகெதர மேல் பகுதி உட்பட மாத்தளை நீர் வழங்கல் திட்டத்திற்குள் உள்ளடங்குகின்ற அனைத்து பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.