சிங்கப்பூர் ஒப்பந்தம்: மீளாய்வு செய்ய தீர்மானம்

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீளாய்வு செய்ய அரசு தீர்மானம்

by Staff Writer 06-02-2020 | 1:17 PM
Colombo (News 1st) கடந்த அரசாங்கத்தில் இலங்கை அரசு மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கிடையில் கைச்சாத்திடப்பட்ட சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிர்மலன் விக்னேஷ்வரன் இன்று (06) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனைப் பரிசீலித்த விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் பி. பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் குழாம், குறித்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்குமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மவ்பிம லங்கா நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தன.

ஏனைய செய்திகள்