வவுணதீவில் பொலிஸ் சார்ஜன்ட் கொலை: இருவர் கைது

வவுணதீவில் பொலிஸ் சார்ஜன்ட் கொலை: இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 5:33 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வவுணதீவு, மூன்றாம் கட்டை பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுணதீவு பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் சார்ஜன்ட் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று காலை கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

நேற்றிரவு வீட்டிலிருந்து தனது பண்ணைப்பகுதிக்கு சென்ற குறித்த சார்ஜன்ட், இரவு 11 மணியளவில் குடும்பத்தினருடன் தொலைபேசியூடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 55 வயதான சார்ஜன்ட் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்