மருத்துவரை மணந்தார் யோகி பாபு

மருத்துவரை மணந்தார் யோகி பாபு

by Bella Dalima 06-02-2020 | 4:16 PM
நகைச்சுவை நடிகா் யோகி பாபுவிற்கும் மருத்துவர் மஞ்சு பார்கவிக்கும் திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று (05) திருமணம் நடைபெற்றுள்ளது. ஆரணி அருகே வாழப்பந்தல் பகுதியை அடுத்துள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் தனது குலதெய்வமான பெரியாண்டவா் கோவிலில் அதிகாலை 5 மணியளவில் யோகி பாபு, சென்னையைச் சோ்ந்த மருத்துவா் மஞ்சு பார்கவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் குறித்த தகவல் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை. யோகி பாபு, மஞ்சு பார்கவி ஆகியோரது உறவினா்கள் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றுள்ளனா்.