பட்டதாரிகளுக்கு மார்ச் முதல் பயிற்சி வழங்க அமைச்சரவை அனுமதி

பட்டதாரிகளுக்கு மார்ச் முதல் பயிற்சி வழங்க அமைச்சரவை அனுமதி

பட்டதாரிகளுக்கு மார்ச் முதல் பயிற்சி வழங்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 7:27 am

Colombo (News 1st) வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அரச தரவுகளின் பிரகாரம் நாடு முழுவதும் சுமார் 50,000 பட்டதாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்