கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 4:32 pm

Colombo (News 1st) ஆறு பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் சந்தேகநபரான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பகுதியில் 5 பேரையும் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் ஒருவரையும் மொத்தமாக 6 பேரை கடத்தி கணாமல் ஆக்கியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்