பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்பு

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவிப்பிரமாணம்

by Staff Writer 05-02-2020 | 3:36 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று பகல் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன இராஜிநாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டிருந்தார்.