உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

by Staff Writer 05-02-2020 | 6:52 AM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த 13 மாதங்களில் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் மத்தியில் மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, பிரித்தானிய ப்ரென்ட் சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 54.45 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 50.12 அமெரிக்க டொலராக விலை குறிப்பிடப்பட்டுள்ளது.