கொரோனா: 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று: 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 05-02-2020 | 2:01 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸூக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் 17 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்பாலான நோயாளிகள், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார். கண்டி போதனா வைத்தியசாலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தவிர, கராப்பிட்டிய வைத்தியசாலையில் 2 நோயாளர்களும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் அங்கொட தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், எவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரை அடையாளம் காண்பதற்காக, விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.