கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2020 | 8:23 am

Colombo(News1st) கொரோனா வைரஸ் பரந்த சர்வதேச நெருக்கடியாக உருவெடுப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உருவாகிய வுஹானில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முன்னெடுப்பு என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சர்வதேச அவசர நிலையை பிரகடனப்படுத்திய உலக சுகாதார ஸ்தாபனம், அது இதுவரை சர்வதேச ரீதியிலான தொற்றாக மாறவில்லை என நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 492 ஐ எட்டியுள்ளது.

சீனாவில் மாத்திரம் 490 பேரும் ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூரில் 24 ஆகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் சீனாவுடனான அனைத்து எல்லைகளையும் மூடுமாறு வலியுறுத்தி ஹொங்கொங் மருத்துவ சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கின்றது.

சீனாவுடனான 13 எல்லைகளில் 10 எல்லைகளை ஹொங்கொங் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்