குணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

குணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

by Bella Dalima 05-02-2020 | 3:58 PM
குணச்சித்திர நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் தனது 54 ஆவது வயதில் இன்று (05) காலமானார். இவர் நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் - அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன் இவர் உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கோபாலகிருஷ்ணனின் மறைவிற்கு தமிழ் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.