காணாமற்போனோரை மண்ணுக்குள் புதைத்தது யார்: விமல் வீரவன்சவிடம் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி 

காணாமற்போனோரை மண்ணுக்குள் புதைத்தது யார்: விமல் வீரவன்சவிடம் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி 

காணாமற்போனோரை மண்ணுக்குள் புதைத்தது யார்: விமல் வீரவன்சவிடம் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி 

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2020 | 7:47 pm

Colombo (News 1st)  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கண்டித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின், அவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா என சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமது உறவுகளை தொலைத்துவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன வேதனைகளோடு வீதியோரங்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு மனிதநேயமற்ற கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச யுத்த நியமங்களுக்கு அமைய சரணடைந்தவர்களையும் பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களையுமே மக்கள் கோருகின்றார்கள் என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்