VForce உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம்

by Staff Writer 04-02-2020 | 8:02 AM
Colombo (News 1st) இலங்கையின் மிகப்பெரும் தன்னார்வ அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (04) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. www.vforce.lk என்பதே அதன் முகவரியாகும். இது தொடர்பில் வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் இவ்வாறு தௌிவுபடுத்தினார். நாட்டின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று, இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள VForce இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் கூறியுள்ளார். இந்த இணையத்தினூடாக பிரவேசித்து, VForce இன் அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும் எனவும் தமது தன்னார்வ அமைப்பின் தலைமைத்துவ கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் தௌிவுபடுத்தியுள்ளார்.