பமீலா அண்டர்சன் ஐந்தாவது தடவையாகவும் விவாகரத்து

பமீலா அண்டர்சனின் ஐந்தாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது

by Chandrasekaram Chandravadani 04-02-2020 | 3:45 PM
திருமணமாகி இரண்டே வார காலத்தில் பிரபல நடிகை பமீலா அண்டர்சன் விவாகரத்து செய்துள்ளார். 52 வயதாகும் பமீலா அண்டர்சன் இதற்கு முன்னர் 4 தடவைகள் திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர். இரண்டு வார காலத்திற்கு முன்னர் 74 வயதான தயாரிப்பாளரான ஜோன் பீட்டர்ஸ் என்பவரை மணந்தார். கடந்த 30 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த நிலையில், தாம் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக பமீலா அண்டர்சன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.