சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 12:15 pm

Colombo (News 1st) நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 244 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பதவியிலுள்ள 17 பேர் மேஜர் ஜெனரல்களாகவும் 45 லெப்டினன் கேர்னல் அதிகாரிகள் கேர்னலாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேஜர் பதவி வகிக்கும் 45 பேர் லெப்டினன் கேர்னல்களாகவும் 42 கப்டன்கள் மேஜர் ஜெனரல்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தவிர, 80 கெப்டன்களுக்கு லெப்டினன் பதவி வழங்கப்பட்டதுடன், இரண்டாம் நிலை லெப்டினன் 11 பேருக்கு லெப்டினன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பெரும்பாலானோருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என இராணுவம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்