சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 4:23 pm

Colombo (News 1st)  72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கைக்கு அமெரிக்கா அறிக்கையூடாக வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நோக்கமானது இரு நாடுகளுக்கிடையிலுமான பொதுவான அம்சம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் ஜனநாயகம்,  இறையாண்மையை நிலைநிறுத்த தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அந்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்களின் அபிவிருத்திக்காக சமாதானம், பொருளாதாரம், பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் ஊடாக சுதந்திரமான சிறந்த இந்து பசுபிக் வலயத்தை உருவாக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்பு செய்வதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், செழிப்பான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்