சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 8:35 am

Colombo (News 1st) 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகளில் இன்று (04) காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸ் வீதி திசையில் பிரவேசித்தல், பொதுநூலக சந்தியில் கிளாஸ் ஹவுஸ் பகுதி ஊடாகவும் ஆனந்தகுமாரசாமி மாவத்தைக்குப் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தர்மபால மாவத்தையிலிருந்து F.R. சேனாநாயக்க வீதிக்குள் பிரவேசிப்பதற்கும் விஜேராம மாவத்தையில் ரொஸ்மிட் பிளேஸ் ஊடாக கன்னங்கர மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் இன்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தவிர, பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கும் பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்டேன்லி விஜேவர்தன மாவத்தையிலிருந்து இலங்கை மன்றப் பாதைக்கு செல்வதற்கும் இன்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்