சீனாவிலிருந்து மேலும் 10 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

சீனாவிலிருந்து மேலும் 10 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

சீனாவிலிருந்து மேலும் 10 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 1:25 pm

Colombo (News 1st) சீனாவில் உயர்கல்வி கற்றுவரும் 10 மாணவர்கள் இன்று (04) நாடு திரும்பவுள்ளனர்.

சீனாவிலிருந்து 717 இலங்கையர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் K. யோகநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ள 15 நோயாளிகள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பிரஜை தொடர்ந்தும் தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர், சீனப் பிரஜையை வைத்தியசாலையிலிருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்