சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 2:14 pm

Colombo (News 1st) சட்ட விவகாரங்களில் அரசியல் தலையீடு காணப்படும் கலாசாரத்தை மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் கடும்போக்குவாத அமைப்புகள் தொடர்ந்தும் நாட்டிற்குள் செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மலே, பேகர், தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தமது பதவிக்காலத்தில் நாட்டின் அனைவரது தலைவராக செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் கூறியுள்ளார்.

​தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்