கொரோனா: சீனாவிற்கு வௌியே இரண்டாவது மரணம் பதிவு

கொரோனா: சீனாவிற்கு வௌியே இரண்டாவது மரணம் பதிவு

கொரோனா: சீனாவிற்கு வௌியே இரண்டாவது மரணம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2020 | 4:49 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணங்களுக்கு பரவியுள்ளது. சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வுஹான் நகரில் இருந்து ஹாங்காங் திரும்பிய 39 வயதானவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாம்போகார்டன் பகுதியை சேர்ந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிற்கு வெளியே ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும். முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த வைரசால் உயிரிழந்தார்.

கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். 20,000-இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்