கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டேனியல் அரப் மொய் காலமானார்

கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டேனியல் அரப் மொய் காலமானார்

கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டேனியல் அரப் மொய் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 1:04 pm

Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டேனியல் அரப் மொய் (Daniel Arap Moi) தனது 95 ஆவது வயதில் இன்று (04) காலமானார்.

கென்யாவின் முதலாவது ஜனாதிபதியான ஜோமோ கென்யாட்டா உயிரிழந்ததையடுத்து, 1978 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக டேனியல் அரப் மொய் பதவியேற்றார்.

அவர் கென்ய ஜனாதிபதியாக 24 வருடங்கள் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதியன்று விவசாயக் குடும்பத்தில் பிறந்த டேனியல் அரப் மொய், 1964 ஆம் ஆண்டு தொடக்கம் 1967 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக செயற்பட்டதுடன் துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்