சீனர்கள் இருக்கும் இடமெல்லாம் பரிசோதனை தொடர்கிறது

சீனர்கள் இருக்கும் இடமெல்லாம் பரிசோதனை தொடர்கிறது

by Fazlullah Mubarak 03-02-2020 | 10:28 AM

Colombo (News 1st) நாட்டில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் கடந்த நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சீனப் பிரஜைகளுக்கு தடிமன் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தென்படுவதாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சீனப் பிரஜைகள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ள விமான பயணிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களுக்கு அமைய, தொற்று ஏற்பட்டிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பயணங்கள், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் சுகாதாரத் தரப்பின் ஆலோசனைகளுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.