பூஜித் ஜயசுந்தரவின் மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியைப் பெயரிட அனுமதி

பூஜித் ஜயசுந்தரவின் மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியைப் பெயரிட அனுமதி

பூஜித் ஜயசுந்தரவின் மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியைப் பெயரிட அனுமதி

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2020 | 7:17 pm

Colombo (News 1st) பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (03) அனுமதி அளித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, S. துரைராஜா, காமினி அமரசேக ஆகிய மூவரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பெயரிடுவதற்கு பிரதிவாதியாகப் பெயரிடும் அனுமதியை நீதியரசர்கள் குழாம் வழங்கியது.

மனு மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.

தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்