ஜெனரல் ஒலெக்  நாட்டிற்கு வருகை

ஜெனரல் ஒலெக் நாட்டிற்கு வருகை

ஜெனரல் ஒலெக் நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Fazlullah Mubarak

03 Feb, 2020 | 10:55 am

Colombo (News 1st) ரஷ்யாவின் தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் 5 நாட்கள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ரஷ்ய தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

நாளை (04) இடம்பெறவுள்ள சுதந்திரதினப் பேரணியிலும் அவர் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

லெக் செல்யுகொவ், தனது 45 வருட சேவைக்காலத்தில் 9 பதக்கங்களை பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்