சுதந்திர தினத்தில் விடுமுறையளிக்கப்படும் பாடசாலைகள் இதோ

சுதந்திர தினத்தில் விடுமுறையளிக்கப்படும் பாடசாலைகள் இதோ

சுதந்திர தினத்தில் விடுமுறையளிக்கப்படும் பாடசாலைகள் இதோ

எழுத்தாளர் Fazlullah Mubarak

03 Feb, 2020 | 10:15 am

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை காரணமாக இன்று (03) கொழும்பிலுள்ள 15 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

ஒத்திகை காரணமாக ஏற்படும் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள 15 பாடசாலைகள் மூடபப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் D.S. சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, யஷோதரா வித்தியாலயம், மியூசியஸ் கல்லூரி, புனித பிரிட்ஜற்ஸ் கல்லூரி, கொழும்பு மகளிர் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை, விர்ச்சலி சர்வதேச பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன் மஹாநாம கல்லூரி, பொல்வத்தை புனித மைக்கல் ஆண்கள் கல்லூரி, பொல்வத்தை புனித மரியாள் மகளிர் பாடசாலை மற்றும் அதன் கனிஷ்ட பிரிவு, மிஹிந்து மகா வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயம், கொழும்பு அஷோக்கா கல்லூரி ஆகிய 15 பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

இன்று வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக பிறிதொரு தினத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்