சுதந்திர தினத்தன்று மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு

சுதந்திர தினத்தன்று மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு

சுதந்திர தினத்தன்று மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2020 | 4:22 pm

Colombo (News 1st) 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்பட்டிருக்கும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி செயற்படும் மதுபானசாலைகள் மற்றும் அதற்கான அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்கிவைத்திருப்போர் குறித்து தகவல்கள் தெரியுமானால் 1913 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பிரதி ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்