சீனப் பெண் தொடர்பில் தொடர் அவதானம்

சீனப் பெண் தொடர்பில் தொடர் அவதானம்

by Fazlullah Mubarak 03-02-2020 | 10:25 AM

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் சீன பெண்ணின் உயிரி மாதிரிகள் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதன் முடிவுகளுக்கு அமைய குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்‌ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நோயாளர்கள் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ​வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொதுமக்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சனநெரிசல் மிக்க பகுதிகளை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சளி மற்றும் தடிமன் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன முகக் கவசத்தை அணியுமாறும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளை கழுவுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை உணவு மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில்லை என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.