கொரோனாவின் கை சீனாவில் ஓங்குகிறது – 350 பேர் இதுவரை உயிரிழப்பு

கொரோனாவின் கை சீனாவில் ஓங்குகிறது – 350 பேர் இதுவரை உயிரிழப்பு

கொரோனாவின் கை சீனாவில் ஓங்குகிறது – 350 பேர் இதுவரை உயிரிழப்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

03 Feb, 2020 | 10:33 am

சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே நகரில் புதிதாக 56 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஹூபேய் நகரில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 103 நோயாளர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதனை விட அதிகமென ஹொங்கொங் பல்கலைக்கழகமொன்று தெரிவித்துள்ளது.

வூஹான் நகரில் மாத்திரம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என குறித்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

வௌிநாடுகளில் வைரஸ் தொற்றுக்கு இலக்கான சுமார் 150 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸால பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்குவதற்கான நி்ர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை திறக்கப்படவுள்ளது.

ஆயிரம் படுக்கைகளை கொண்ட குறித்த வைத்தியசாலை 8 நாட்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்று 173 பில்லியன் அமெரிக்க டொலரை பங்கு சந்தைகளில் முதலீடு செய்யவுள்ளதாக சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்