எயார்பஸ் விவகாரம்: கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை கைது செய்ய பிடியாணை

எயார்பஸ் விவகாரம்: கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை கைது செய்ய பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2020 | 9:17 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (03) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை தௌிவுபடுத்தியதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எயார்பஸ் ரகத்தைச் சேர்ந்த 10 விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பீடு செய்ததன் மூலம் நிதித் தூய்தாக்கலில் ஈடுபட்டதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்