இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே இலக்கு – லோகேஷ் ராகுல்

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே இலக்கு – லோகேஷ் ராகுல்

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே இலக்கு – லோகேஷ் ராகுல்

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2020 | 3:26 pm

Colombo (News 1st) இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே தமது இலக்கு என இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

அதற்காக சகலதுறைகளிலும் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் நேற்று நிறைவுக்குவந்த 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் லோகேஷ் ராகுல் 224 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அத்துடன், நேற்று நடைபெற்ற ஐந்தாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக தலைவராகவும் லோகேஷ் ராகுல் செயற்பட்டிருந்தார்.

சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்