நெல் கொள்வனவிற்கு 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நெல் கொள்வனவிற்கு 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

by Staff Writer 02-02-2020 | 7:16 AM
Colombo (News 1st) பெரும்போக அறுவடையில் இம்முறை 150,000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக நெல் கொள்வனவு சபை தெரிவித்துள்ளது. நெல் கொள்வனவிற்காக 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலர்த்தப்பட்ட நெல் 50 ரூபாவிற்கும் உலர்த்தப்படாத நெல் 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுளளது. மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நெல் கொள்வனவு சபை தெரிவித்துள்ளது.