​கொரோனா வைரஸ்: பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழப்பு

​கொரோனா வைரஸ்: பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 02-02-2020 | 12:34 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீனப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸில் உயிரிழந்துள்ளார். சீனாவைத் தவிர உலக நாடொன்றில் பதிவாகிய முதலாவது உயிரிழப்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து சென்ற ஒருவரே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மணிலா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்பிரகாரம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.