கோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த ரயில் சேவை

கோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த ரயில் சேவை

கோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2020 | 8:00 am

Colombo (News 1st) ‘தெநுவர மெனிகே’ ரயில் இன்று (02) முதல் கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த ரயில் இதுவரை காலமும் 2 நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரமே பதுளை வரை பயணித்ததாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தெநுவர மெனிகே ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இதேவேளை, சீனாவிலிருந்து புதிய ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்களில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்